இதுகுறித்த அறிவிப்பில், புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் வீட்டு உபயோகங்களுக்கான மின் கட்டணம், வர்த்தக ரீதியான மின் கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி, வீட்டு பயன்பாட்டிற்கு முதல் 100 யூனிட் வரை 20 காசுகள் உயர்த்தப்பட்டு 1.50 காசுகளாகவும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 2.55 காசுகளாகவும், 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை 15 காசுகள் உயர்த்தப்பட்டு 4.50 காசுகளாகவும், 300 யூனிட்டிற்கு மேல் 30 காசுகள் உயர்த்தப்பட்டு 5.90 காசுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து வர்த்தக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட்டிற்கு 10 பைசா முதல் 30 பைசாவரை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக அடிப்படை கட்டணங்களிலும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இணை மின்சார ஒழங்குமுறையின் பரிந்துரையின் பேரில் புதுச்சேரியில் இந்த மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மின்சாரம் தனியார் மயம் - தன்னிச்சையான முடிவு என நாராயணசாமி குற்றச்சாட்டு!