புதுச்சேரியில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல், மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது என அம்மாநில மின்துறை அறிவித்திருந்தது. இதற்குப் பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திப்பு ராயப்பேட்டை அருகே உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி மாநிலச் செயலாளர் சலீம் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கரோனா பேரிடரால், மக்கள் பெரிதும் துன்பமடைந்துவரும் நிலையில், மின் துறையின் இந்தக் கட்டண உயர்வு, மக்களுக்குப் புதிய சுமையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதனால், அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும்; அதுமட்டுமின்றி, சர்-சார்ஜ் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'இலவச மின்சாரம் வழங்கினால் மட்டுமே மின் திருத்தச் சட்டத்தை ஏற்போம்' - அமைச்சர் தங்கமணி