ETV Bharat / bharat

மின் ஊழியர்களைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏ தர்ணா - அதிமுக எம்எல்ஏ தர்ணா

புதுச்சேரி: மின்துறை ஊழியர்களின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Puducherry admk mla dharna protest against eb employees

author img

By

Published : Jun 20, 2020, 2:48 PM IST

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறைகள் தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, புதுச்சேரி மின்துறை ஊழியர்கள், மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, மின் துறை ஊழியர்கள் அனைவரும் நேற்று தங்களது அலைபேசியை அணைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முத்தியால் பேட்டை பகுதியில் நேற்றிரவு இருநூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஏற்பட்ட மின் பழுதுகளை சரி செய்ய முடியாமல் மக்கள் தவித்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி மின்துறை ஊழியர்களின் போராட்டத்தைக் கண்டித்தும், மின்துறை ஊழியர்கள் பழுது நீக்கம் உள்ளிட்ட எந்தவித பணிகளைச் செய்யாததைக் கண்டித்தும், உடனடியாக மின் ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்குச் செல்ல வலியுறுத்தியும் முத்தியால்பேட்டை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மின் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அலுவலர்கள் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆர்பாட்டத்தைக் கைவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.