புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், இன்று (செப். 26) நாராயணசாமி தலைமையில் விவசாய மசோதாக்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். விவசாய சங்கத் தலைவர்களும் இதில் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் இந்த மசோதாக்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றுவரும் சூழலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் இணைந்து இம்மசோதாக்களுக்கு எதிராக வருகின்ற 28ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆளுநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கரோனா மீட்புப் பணி நடைபெற்றுவரும் நேரம்; இது போராட்டத்திற்கான நேரம் அல்ல. எனவே, வேளாண் மசோதாவுக்கு எதிராக நடக்கவுள்ள போராட்டத்தை தவிர்க்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். ஆனால், அதை மீறி போராட்டம் நடத்த இன்றைய கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு..சிபிஐயிடம் ஒப்படைக்க முதலமைச்சரிடம் எம்எல்ஏ மனு