புதுச்சேரியில் பொதுப்பணித் துறை தொடர்பான பொது கணக்கு குழு கூட்டம் சட்டப்பேரவைத் தலைவர் சிவா தலைமையில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள கமிட்டி அறையில் நடந்த இந்தக் கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன், அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், பாஸ்கர் என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயபால், புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் வின்சன்ட் ராயர், மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை சார்பாக இதுவரை நடந்த மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் இன்னும் நடைபெற உள்ள சாலை பணிகள், மேம்பால பணிகள் போன்றவற்றிற்கு தேவையான நிதி நிலைமை குறித்தும், கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க:கடைசிவரை குடிசையிலேயே இருந்த 'எளிமை எம்எல்ஏ'! - காமராசராகவே வாழ்ந்த காத்தவராயன்!