கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கே அவதியடைந்துவருகின்றனர். ஆனால் நாடு முழுவதும் வங்கிச் சேவை பாதிக்கப்படாமல் ஊழியர்கல் பணிபுரிந்துவருவது, மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. வங்கிச் சேவை பாதிக்கப்பட்டால் மக்களின் அன்றாட பணப்புழக்கத்திற்குப் பிரச்னை ஏற்படும்.
இந்நிலையில் கரோனா வைரஸ் காலத்திலும் வங்கிச் சேவை பாதிக்கப்படாமல் பணிபுரியும் வங்கி ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், ''நாட்டின் முக்கியமான சூழலில் சிறப்பாகப் பணிபுரிந்துவரும் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் பாராட்டுகள்.
பொதுத் துறை வங்கிகளில் பணிபுரிவோருக்கு மருத்துவப் பாதுகாப்பு வழங்குவதோடு, கரோனா வைரசால் பொதுத் துறை வங்கி ஊழியர்கள் யாரேனும் உயிரிழந்தால் அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகியவை ஊழியர்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இதையும் படிங்க: ஐடி நிறுவனங்களுக்கு நான்கு மாத வாடகையில் விலக்கு!