ETV Bharat / bharat

'ஓராண்டுக்கு சம்பளத்தில் 30 விழுக்காடு குறைப்பு...' - எடுத்துக்காட்டான குடியரசுத் தலைவர்! - president cut salary for 30 percent for one year

டெல்லி: கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்குவதற்காக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது ஊதியத்தில் 30 விழுக்காடு ஓராண்டுக்கு விட்டுக்கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி
ஜனாதிபதி
author img

By

Published : May 15, 2020, 12:55 PM IST

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் நிவாரண நிதிக்கு பல பிரபலங்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த பணத்தை வழங்கி வருகின்றனர். அதன்படி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது மார்ச் மாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது ஊதியத்தில் 30 விழுக்காட்டினை ஓராண்டுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "மாளிகையில் புதிய கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறாது. தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும் குடியரசுத் தலைவரின் உள்நாட்டு சுற்றுப்பயணங்கள், திட்டங்கள் கணிசமாக இந்தாண்டு குறைக்கப்படும். முக்கிய விழாக்களுக்குச் செல்வதற்கு லிமோசைன் சொகுசு கார் வாங்க ராம்நாத் கோவிந்த் திட்டமிட்டிருந்தார். தற்போது, அந்தத் திட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.

மாளிகையில் பராமரிப்புப் பணிகள், பழுதுநீக்கும் பணிகள் போன்றவை இந்த ஆண்டு குறைக்கப்பட்டு செலவு மிச்சப்படுத்தப்படும். ராஷ்டிரபதி பவனில் மின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதின் மூலம், காகித பயன்பாட்டைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், தனது ஊதியத்தில் 30 விழுக்காட்டினை ஓராண்டுக்கு விட்டுக்கொடுக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு எடுத்துள்ளார். இதன்மூலம் சேமிக்கப்படும் நிதி, கரோனா தடுப்புப் பணிகளுக்குத் தரப்படும்.

சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதிலும், வீண் செலவுகளைத் தவிர்த்தல் மூலமும் நாட்டு மக்களுக்கு உதாரணமாக குடியரசுத் தலைவர் மாளிகை இருக்க வேண்டும். இதனால், சேமிக்கும் நிதியானது கரோனா வைரஸுக்கு எதிரான போருக்காகப் பயன்படுத்த அலுவலர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கால் பாரம்பரிய முறைக்குத் திரும்பிய ஆழ்கடல் ராசாக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.