ETV Bharat / bharat

குடியரசுத் தலைவர் உரையில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்குப் பாராட்டு! - பட்ஜெட் 2021

டெல்லி: ராமர் கோயில் கட்டுமான பணி தொடங்கியதற்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதற்கும் குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் உரை
குடியரசு தலைவர் உரை
author img

By

Published : Jan 29, 2021, 5:11 PM IST

நிதிநிலை அறிக்கைக் கூட்டு கூட்டத்தொடரில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அப்போது, ராமர் கோயில் கட்டுமான பணி தொடங்கியதற்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதற்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "மிகச் சிக்கலாக கருதப்பட்ட பல விவகாரங்கள் கடந்த சில ஆண்டுகளில் தீர்த்துவைக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதால், ஜம்மு காஷ்மீர் மக்களுக்குச் சில உரிமைகள் கிடைத்துள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் உரை

முன்னதாக புறக்கணிக்கப்பட்டுவந்த நேரடி பணப்பரிமாற்றத்தால் பலருக்கு உதவி கிடைத்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு 13 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் நேரடியாக மாற்றப்பட்டுள்ளது" என்றார்.

கடந்த 2019 நவம்பர் 9ஆம் தேதி 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளைக்கு வழங்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதேபோல், சன்னி வக்பு வாரியத்திற்கு வேறு இடத்திலிருந்து 5 ஏக்கர் நிலத்தை வழங்க ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.