ETV Bharat / bharat

கீழூர் நினைவுத்தூண் பகுதியில் 'களைகட்டிய புதுச்சேரி சுதந்திர தினம்' - pondy independence day news

புதுச்சேரி சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் நாராயணசாமி கீழூர் நினைவு தூண் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி சுதந்திர தின கொண்டாட்டம்
author img

By

Published : Aug 16, 2019, 2:34 PM IST

Updated : Aug 16, 2019, 7:29 PM IST

பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்துவந்த புதுச்சேரிமாநிலம், இந்திய அரசுடன் இணைய வேண்டுமா? வேண்டாமா? என்ற கருத்து கேட்பு வாக்குப்பதிவு 1954ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி புதுச்சேரி கீழுர் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த ஓட்டெடுப்பில் 178 பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 உறுப்பினர்களும், எதிராக 8 உறுப்பினரும் வாக்களித்தனர். இதனை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16ஆம் தேதி 'புதுச்சேரி சுதந்திர தினம்' கீழுர் நினைவு மண்டபம் வளாகத்தில் கொண்டாடப்படுகிறது.

புதுச்சேரி சுதந்திர தின கொண்டாட்டம்

இன்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில்முதலமைச்சர் நாராயணசாமி கலந்துக் கொண்டு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் இதைத்தொடர்ந்து கீழுர் நினைவுகளில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தியாகிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இவ்விழாவில் அமைச்சர்கள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Intro:புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த நாள் புதுச்சேரி சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது இதனை முன்னிட்டு முதல்வர் நாராயணசாமி கீழூர் நினைவு தூண் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

Body:புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்துவந்த புதுச்சேரி இந்திய அரசுடன் இணைய வேண்டுமா வேண்டாமா என்ற கருத்து கேட்பு வாக்குப்பதிவு 1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி ஓட்டெடுப்பு புதுச்சேரி கீழுர் கிராமத்தில் நடைபெற்றது
இந்த ஓட்டெடுப்பில் 178 பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டு இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 உறுப்பினர்களும் எதிராக 8 உறுப்பினரும் ஓட்டளித்தனர் இதனை நினைவு கூறும் வகையில் கீழுர் நினைவு மண்டபம் வளாகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 16ம் தேதி புதுச்சேரி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது இதனை முன்னிட்டு இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து கீழுர் நினைவுகளில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார் பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது இவ்விழாவில் அமைச்சர்கள் மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Conclusion:புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த நாள் புதுச்சேரி சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது இதனை முன்னிட்டு முதல்வர் நாராயணசாமி கீழூர் நினைவு தூண் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்
Last Updated : Aug 16, 2019, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.