ETV Bharat / bharat

புதுவையில் அரசுப் பேருந்துகள் இயக்க அனுமதி! - அரசுப் பேருந்துகள் இயக்கம்

புதுச்சேரி: பெங்களூருக்கு வருகிற 28 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என புதுச்சேரி பிஆர்டிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுவையில் அரசுப் பேருந்துகள் இயக்க அனுமதி!
Buses opens to bengaluru in pondicherry
author img

By

Published : Oct 24, 2020, 11:02 PM IST

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்கள் நலனுக்காக PRTC நிர்வாகம் புதுச்சேரி - பெங்களூர் சென்றுவர வருகின்ற அக்.28 ஆம் தேதி முதல் தினமும் பேருந்து இயக்க உள்ளது. இதற்கு 275+25=300 ரூபாய் பணம் பயண கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்தப் பேருந்து புதுச்சேரியிலிருந்து இரவு 11 மணிக்கு புறப்படும். இதே பேருந்து பெங்களூருவிலிருந்து தினமும் நண்பகல் 12.30 மணிக்கு புறப்படும்.

இந்தப் பேருந்தில் அரசு உத்தரவுப்படி தகுந்த இடைவெளி காரணமாக அதிகபட்சமாக 33 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருக்கும் பயணிகள் பயணம் இனிதே அமைய புதுவை பேருந்து நிலையத்திலுள்ள PRTC முன்பதிவு அலுவலகம், ஆன்லைன் மூலம் போக வர(RETURN TICKET) பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.