முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ராஜீவ் காந்தி குடும்பத்தினர் மட்டுமின்றி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.