ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது விளாடிவோஸ்டாக் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, மோடி சந்திக்கிறார். இது இருநாட்டு 20ஆவது வருடாந்திர பேச்சுவார்த்தையாகும். மேலும் ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய கப்பல் கட்டும் தளத்தையும் ரஷ்ய அதிபருடன் மோடி பார்வையிடுகிறார்.