சென்னை: தமிழ்நாட்டிற்கு வரும் 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகைத் தரவுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம், வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் இடையேயான மெட்ரோ ரயில் விரிவாக்கத்திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னை நேரு உள்நாட்டு விளையாட்டு அரங்கில், இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டுக்கு வருகைத் தரும் மோடி, முக்கியத் தலைவர்களையும் சந்தித்து பேசவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகைப் புரிவது, அரசியல் வட்டாரத்தில் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:சட்டப்பேரவை தேர்தல் களம்! மண்டலங்களின் நிலை என்ன?