இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 'இந்தியாவில் முதலீடு' என்ற மாநாடு கனடாவில் நடைபெற உள்ளது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொள்ளும் மோடி, அந்நாட்டு தொழிலதிபர்களிடையே உரையாற்ற உள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் முதலீடு செய்ய கனடா தொழிலதிபர்களுக்கு இந்த மாநாடு பெரும் வாய்ப்பை அளிக்கும்.
இன்று மாலை 6:30 மணிக்கு, பிரதமர் மோடி கனடா தொழிலதிபர்களிடையே உரையாற்றவுள்ளார். இந்தியாவை சிறந்த முதலீடு செய்யும் நாடாக இந்த மாநாடு எடுத்துரைக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து துறை, மின்னணுத் துறை, உற்பத்தித் துறை, வங்கிகளின் பிரதிநிதிகள், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.