இந்தியா - அமெரிக்கா வியூக ரீதியிலான கூட்டணிக்கான தலைவர்களின் (USISPF) மூன்றாம் ஆண்டு மாநாட்டில் பிரதமர் மோடி இன்று (செப்.3)உரையாற்றுகிறார். காணொலி வாயிலாக பிரதமர் மோடி தனது உரையை இரவு 9 மணிக்கு ஐஎஸ்டியில் தொடங்குவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒரு வார காலம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில், அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் உரையாற்றினார். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டின் மையப்பொருள் 'புதிய சவால்களை எதிர்கொள்ளும் இந்தியா' என்பதும் அடங்கும். உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதற்கான இந்தியாவின் சாத்தியக்கூறுகள், இந்திய எரிவாயு சந்தையின் வாய்ப்புகள், அந்நிய நேரடி குறியீட்டை (எஃப்.டி.ஐ) ஈர்ப்பதற்காக வணிகத்தை எளிதாக்குதல், தொழில்நுட்பத்தில் பொதுவான வாய்ப்புகள், சவால்கள், இந்திய பசுபிக் பொருளாதார சிக்கல்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் மையப்பொருளாக வைத்து பேசப்படுகிறது.
மேலும், இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், மூத்த அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா உறவை மேம்படுத்த முயற்சி