ETV Bharat / bharat

பாதுகாப்புத்துறையை மோடி மேம்படுத்துகிறார் - அருண் ஜெட்லி - இந்திய பாதுகாப்புத் துறை

டெல்லி: பாதுகாப்புத் துறையை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி பல ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அருண் ஜேட்லி
author img

By

Published : Mar 28, 2019, 8:44 AM IST

Updated : Mar 28, 2019, 10:28 AM IST

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிடுவதாக நேற்று காலை அறிவித்திருந்தார். பின்பு நேற்று பிற்பகலில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக செய்துள்ளதாக அறிவித்தார். இதன்மூலம், விண்வெளித்துறையில் ரஷ்யா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

மிஷன் சக்தி என்ற அச்சோதனையை வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்நிலையில் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, நமது இந்திய விஞ்ஞானிகள் மிஷன் சக்தி திட்டத்தை செயல்படுத்த நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு சமீபத்தில்தான் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியது.

இந்தியாவின் அணு சக்தி திட்டம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அத்திட்டம் தேர்தலுக்கு பின்பும் தொடரும். இந்த அணுசக்தி திட்டத்திற்கு எதிர்கட்சிகள் உரிமை கோர முடியாது. ஏனெனில் இத்திட்டம் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னரே தொடங்கப்பட்டது.

பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பு துறையை மேம்படுத்துவதற்காக பல ஒப்பற்ற முயற்சிகளை செய்து வருகிறார். மிஷன் சக்தி திட்டம் நம் நாட்டின் பாதுகாப்பிற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலங்களில் இணையம், விண்வெளி, நீர்வழி என அனைத்து பகுதிகளிலும் இந்தியாவின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்தர்.

Last Updated : Mar 28, 2019, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.