ETV Bharat / bharat

முகக்கவசங்களை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பாக மனு! - SC seeking proper disposal of masks

டெல்லி: முகக்கவசங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு அரசு விளக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

PIL moves to SC seeking proper disposal of masks

author img

By

Published : Apr 22, 2020, 5:01 PM IST

கரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், அவ்வப்போது கைகளை கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யவேண்டும் எனவும், முகக் கவசங்கள் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், முகக் கவசங்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்ற புரிதல் இன்றி பலரும் முகக் கவசங்களை சாலைகளில் வீசிச் செல்வதாகவும், இதன்காரணமாக தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகளவு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் பயணிப்போர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களும், நோய்வாய்ப்படாத மக்களும் பாதிக்கப்பட அதிகளவு வாய்ப்புள்ளது.

எனவே, முகக் கவசங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது குறித்து அரசு மக்களுக்கு விளக்கமளிக்கவேண்டும் எனவும், மருத்துவக் கழிவுகள் குறித்து பொதுமக்களு்ககு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவர் அன்கித் குப்தா பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

மேலும், அந்த மனுவில், கரோனா வைரஸ் தொற்று தொடர்பான அனைத்து விழிப்புணர்வுகளையும், மத்திய, மாநில அரசுகளின் தகவல்களையும் மக்கள் அதிகளவில் உபயோகிக்கும் ஊடகங்கள் வாயிலாக கொண்டு செல்லவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முகக் கவசம் - எவ்வாறு கையாள வேண்டும் என விளக்குகிறார் மருத்துவர் வெங்கடேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.