ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்டம் சிப்ருபள்ளி பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பகுதியில் ஆந்திர அரசின் கிலோ ரூ.25க்கு வெங்காயம் விற்பனை ஆனது. இதனை வாங்க பெண்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டது.
அதிக மக்கள் கூட்டம் காரணமாக பொறுமை இழந்த பெண்கள் தடுப்புகளை மீறி ஏறிக் குதித்து கடைக்குள் செல்ல முயற்சித்தனர். வெங்காயத்தை வாங்கி விட வேண்டும் என்ற நப்பாசையில் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொண்டனர். இதற்கு மத்தியில் வெங்காய விற்பனை நடந்தது.
நாடு முழுவதும் வெங்காய விலை அதிக ஏற்றத்துடன் காணப்படுகிறது. கிலோ ரூ.100 வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மலிவு விலையில் வெங்காய விற்பனையை அறிவித்துள்ளார்.
வெங்காய விலையேற்றத்துக்கு உற்பத்தி சரிவு மற்றும் செயற்கையான பதுக்கல் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்தியாவில் வெங்காய விலை அதிகரித்துள்ள நிலையில் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் அதன் தாக்கம் தெரிகிறது.
இதையும் படிங்க: வெங்காயம் தட்டுப்பாடு ஏன்?