நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
உலகையே அச்சுறுத்திய கரோனா வைரஸை குணப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், பதஞ்சலி நிறுவனம் கரோனா வைரஸை குணப்படுத்தும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது.
இதுதொடர்பாக, பதஞ்சலி அறக்கட்டளையின் நிறுவனத்தின் செயலாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறுகையில், ”பதஞ்சலி நிறுவனம் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பூசி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
இந்த மருந்தை உருவாக்க நூற்றுக்கணக்கான பதஞ்சலி விஞ்ஞானிகள் இரவும் பகலும் உழைத்துள்ளனர். இந்த மருந்து கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு வெவ்வேறு இடங்களில் வழங்கப்பட்டது. இவர்களில் 80 சதவீதம் பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
ஜனவரி மாதம் சீனாவின் வுஹான் நகரில் முதல் நபர் கரோனாவால் பாதிக்கப்பட்டது முதலே, பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் தடுப்பூசி உருவாக்கும் பணியைத் தொடங்கியது. விஞ்ஞானிகள் இந்த மருந்தை தயாரிக்க முழுமையான நம்பகத்தன்மையுடன் பணியாற்றியுள்ளனர். இதில், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் சிங்கப்பூர் விஞ்ஞானிகளும் அடங்குவர்” என்றார்.