மகாராஷ்டிராவின் கடலோர மாவட்டமான பல்கரில் ஏப்ரல் 16ஆம் தேதி இரண்டு சாமியர்கள் உள்ளிட்ட மூவரை, அடையாளம் தெரியாத கும்பல் அடித்துக் கொலை செய்தது. கண்டிவிலி பகுதியில் இருந்து சூரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த மூவர், கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார். இந்த சம்பவம் காவல்துறையினரின் பார்வையிலேயே நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் குறித்து அம்மாநில அரசு உரிய பதிலளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கைத் தாக்கல் செய்த மகாராஷ்டிரா அரசு, பணி நேரத்தில் கவனக்குறைவாக இருந்ததாக் கூறி இரு காவலர்களை இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இந்த வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 101 பேர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாய் இருந்த மகன் கொலை: தாய் கைது!