பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரிலிருந்து 400 கி.மீ. தூரத்தில் உள்ளது ராக்கி கஜ். இந்தப் பகுதியில் ரோந்து மேற்கொண்ட அந்நாட்டு காவல் துறையினர் ராஜு என்ற இந்தியரை உளவாளி என்று கூறி கைது செய்துள்ளது.
பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து டிஜி கான் மாவட்டத்திற்கு அவர் நுழைய முற்பட்டபோது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்தியாவிற்காக உளவு பார்த்ததை ராஜுவே ஒப்புக்கொண்டதாகவும் பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.