கரோனா வைரஸ் நோய்த்தொற்று நாளுக்கு நாள் பெங்களூருவில் அதிகரித்துவருதையடுத்து இன்று (ஜூலை14) இரவு 8 மணி முதல் 22ஆம் தேதி வரை மீண்டும் முழுமையான ஊரடங்கு என மாநில அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெங்களூருவிலிருந்து தங்களின் சொந்த மாநிலம், மாவட்டங்களுக்கு செல்ல மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். அதனால் பெங்களூருவில் மக்கள் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கவும், குடிப்பழக்கம் கொண்டவர்கள் மதுவை வாங்கவும் குவித்தனர். இதனால் கரோனா அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க...சமூக விரோதிகள் சிறார்களை பயன்படுத்தி குற்றங்களை செய்வதைத் தடுக்க வேண்டும்!