கரோனா பேரிடர் காலத்தில் மற்ற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக கடந்த மே மாதம் 6ஆம் தேதி மத்திய அரசால் வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை பல்வேறு கட்டங்களாக தாயகம் அழைத்துவரப்படுகின்றனர்.
இதுவரை 15 லட்சம் பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அதில் ஏர் இந்திய விமானம் மூலம் மட்டும் 4.5 லட்சம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 5ஆம் தேதி மட்டும் 4 ஆயிரத்து 59 பேர் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதியில் 153 இந்தியர்கள் தாய்லாந்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.
இதையும் பாருங்க: நேட்டோ நாடுகள் மீது பறந்த அமெரிக்க போர்விமானம்