ETV Bharat / bharat

ஆபரேஷன் சமுத்ரா சேது : இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ் ஜலஷ்வா மாலத்தீவு விரைந்தது! - மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் 750-க்கும் மேற்பட்ட இந்தியர்கள்

டெல்லி : கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக, மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் 750-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க ஐ.என்.எஸ் ஜலஷ்வா சென்றடைந்தது.

Operation Samudra Setu: INS Jalashwa reaches Male to evacuate about 750 Indians
ஆபரேஷன் சமுத்ரா சேது : இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ் ஜலஸ்வா மாலத்தீவு விரைந்தது!
author img

By

Published : May 8, 2020, 9:46 PM IST

கரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களை தாயகம் அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள், கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களில் மீட்டு வர ஏற்பாடுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.

Operation Samudra Setu: INS Jalashwa reaches Male to evacuate about 750 Indians
மாலத்தீவின் தலைநகர் மாலே சென்றடைந்துள்ள இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ் ஜலஸ்வா

இந்த மீட்பு நடவடிக்கைகளுக்காக, இந்தியக் கடற்படையைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் துபாய், மாலத்தீவு விரைந்துள்ளன. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியக் குடிமக்களை தாயகம் மீட்டுவருவதற்காக இந்தியக் கடற்படை தொடங்கியிருக்கும் ‘ஆபரேஷன் சமுத்ரா சேது’வின் ஒரு பகுதியாக விசாகப்பட்டினத்தைத் தளமிடமாகக் கொண்டிருக்கும் ஐ.என்.எஸ். ஜலஷ்வா மாலத்தீவின் தலைநகர் மாலே சென்றடைந்துள்ளது.

இது தொடர்பாக கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீட்புப் பணிகளுக்காக பிரத்யேகமாக இயக்கப்படும் இந்த ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பலில், 8894 டன் எடையை ஏற்றலாம். ஒட்டுமொத்தமாக அதிகபட்சம் 16590 டன் வரை எடையை இக்கப்பல் தாங்கும். ஐஎன்எஸ் ஜலஷ்வா 20 நாட் வேகத்தில் (37 கிலோமீட்டர் வேகத்தில்) செல்லக்கூடியது.

நாளொன்றுக்கு 212 டன் புதிய நீரிலிருந்து 3 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஐ.என்.எஸ் ஜலஷ்வா மூலமாக சுமார் 750 பேரை மீட்டுவர திட்டமிட்டுள்ளது. இந்தியக் கடற்படையில் பணியாற்றும் ஜலஷ்வா கப்பலில் 27 அலுவலர்கள், 380 கடற்படையினர் பணியாற்றுகிறார்கள். இந்த கப்பலின் மருத்துவ, நிர்வாக அலுவலர்களுக்கு உதவி ஊழியர்களுடன் நிவாரணப் பொருள்கள், கோவிட் -19 பாதுகாப்புப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

சமூக தூரத்தைக் கடைப்பிடித்து, சுகாதாரப் பராமரிப்புடன் இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள். சிறப்புக் கப்பலில் ஏறுவதற்கு முன்பு, பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், நீரிழிவு நோய் அல்லது ஏதேனும் சுவாச நோய் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும். அறிகுறியற்ற பயணிகளும், பாதிக்கப்பட்ட பயணிகளும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். ”என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : கரோனாவுக்கு எதிரான போர் என்பது ஜனநாயக கடமை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.