புதுச்சேரி ராஜ் நிவாஸ் ஊழியர் ஒருவருக்கு நேற்று ( ஜூலை.8) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இரண்டு நாள்களுக்கு ராஜ் நிவாஸ் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ராஜ்நிவாஸ் அலுவலர்கள், ஊழியர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே, ஆளுநர் மாளிகையில் உள்ள அலுவலகத்தின் உட்புறம், வெளிப்புறம் முழுவதும் கிருமி நாசனி தெளிக்கப்பட்டது.
இதற்கிடையில் ராஜ்நிவாஸ் பணியாளர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருந்ததில், மேலும் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் முதலியார்பேட்டை பகுதியைச் சார்ந்த டேட்டா ஆபரேட்டர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் துணை நிலை ஆளுநர் மாளிகையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
ஆளுநர் மாளிகை ஊழியர்களில் மேலும் ஒருவருக்கு கரோனா
புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் மாளிகையில் இரண்டாவது நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுளார்.