உத்தரப் பிரதேச மாநிலம் சின்ஹட் பகுதியில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு 8 மணி அளவில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று தொழிலாளர்கள் விபத்தில் வெளியான ரசாயனத்தின் தாக்கத்தால் மூர்ச்சையடைந்தனர்.
இவர்கள் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவம் இடம் விரைந்த தொழிற்சாலை வல்லுநர் குழு, தேசிய பேரிடர் மீட்புக் குழு விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டன. இந்த விபத்தில் மேலும் பலர் காயம் அடைந்து இருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.