அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணற்றில் கடந்த 8ஆம் தேதி திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், இது சுற்றுவட்டார கிராமங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள அசாம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பெட்ரோலியத்துறை அமைச்சகமும் இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய மூன்று நபர் கொண்ட உயர்மட்ட ஆணையத்தை அமைத்துள்ளது. ஹைட்ரோகார்பன்கள் இயக்குநரகத்தின் தலைவர் எஸ்.சி.எல். தாஸ் தலைமையிலான இந்த ஆணையத்தில் ஓஎன்ஜிசி முன்னாள் தலைவர் பி. சி. போரா, ஓஎன்ஜிசி முன்னாள் இயக்குநர் டி. கே. சென்குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியா - சீனா மோதல் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் - அதிர் ரஞ்சன் சௌத்ரி