ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் #gobackmodi என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கப்பட்டதற்கு பிறகான மோடியின் சென்னை பயணம் என்பதால் காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து நெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர்.
முதலில், காஷ்மீரிக்களை விடுதலை செய் என ட்விட்டரில் ஒருவர் பதிவு செய்துள்ளார்.
பாசிச கொள்கைக்கு எதிரானவர்கள் நாங்கள். மதவாதத்திற்கு எதிரானவர்கள் நாங்கள். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரானவர்கள் நாங்கள் என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், காஷ்மீரிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் எப்போதும் துணை நிற்பார்கள். அதிகாரத்தின் மீது நாட்டமுடைய ஒருவர் காஷ்மீரை ஒடுக்கிவிட்டு சென்னை வருகிறார். அவர் எங்களுக்கு தேவையில்லை. பெரியார் மண்ணில் பாசிசத்திற்கு இடமில்லை. கொடுங்கோல் ஆட்சியை எதிர்போம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், பலர் மோடி வருகைக்கு எதிராக பலவிதமான மீம்ஸ்களை பகிர்ந்துள்ளனர்.