மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் கேரள சட்டப்பேரவையில் கொண்டாடப்பட்டது. விழாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது:
இந்திய நாடாளுமன்றத்தின் மத்திய வளாகத்தில் ஒருவருடைய புகைப்படம் வைக்க வேண்டுமானால் அது சாவர்க்கர் படம் அல்ல. நாராயணன் மேனன் படமாகதான் இருக்க வேண்டும்.
விநாக் தாமோதர் சாவர்க்கர் ஆங்கிலேய அரசிடம் மன்னிப்பு கேட்டவர். ஆனால் பலவித துன்பங்களை அனுபவித்த போதிலும் எவ்வித சமரசத்திலும் ஈடுபடாதவர் நாராயணன் மேனன். அவரே கவுரவிக்கப்பட வேண்டிய நபர். மேலும் நாராயணன் மேனன் காந்தியை சுட்டுக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் அல்ல.
ஆனால் ஒரு கோயிலை கட்டவும், நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை சாவர்க்கருக்கு வழங்கவும் சிலர் அறிவுறுத்துகின்றனர். தேசத்தின் தந்தையை விட சில ஆசாமிகளை திருப்பிப்படுத்த முயல்கின்றனர். காந்தியின் சமூக மதிப்புகளை அவரின் சிந்தனைகளை மீட்டெடுக்க வேண்டியது தற்போதைய அவசியம் என்றார்.
புகையிலை பொருட்கள் இல்லாத கேரள மாநிலத்தை உருவாக்க 90 நாள்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30ஆம் தேதி நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சாவர்க்கருக்கு பாரத ரத்னா... விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அவமரியாதை...!'