ETV Bharat / bharat

'காப்பாற்ற வேண்டியது இந்தியாவை அல்ல காங்கிரஸை' - பாஜக தாக்கு

author img

By

Published : Nov 17, 2019, 10:14 AM IST

டெல்லி: ஆபத்தான நிலையிலுள்ளது காங்கிரஸ் கட்சிதான் என்றும்; அதைத்தான் காக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Prem Shukla

'தேசத்தைக் காப்போம்' என்பதை வலியுறுத்தி 'பாரத் பச்சோ' பேரணியைக் காங்கிரஸ் வரும் நவம்பர் 30ஆம் தேதி டெல்லியுள்ள ராம் லீலா மைதானத்தில் நடத்தவிருக்கிறது. இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "இந்தியா எந்த ஒரு ஆபத்தான நிலையிலும் இல்லை. ஆபத்தான நிலையில் இருப்பது காங்கிரஸ்தான். அதைத்தான் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் அவர்களால் ஊழலில் ஈடுபட வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்றும்; அதுதான் அதன் தலைவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்துகிறது என்றார்.

காங்கிரஸ் மட்டுமில்லாமல் அதன் கூட்டணிக் கட்சிகளும் இங்கு தாக்குப்பிடிக்கவே கடும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது என்ற பிரேம் சுக்லா, அவர்கள் முதலில் காக்க வேண்டியது நாட்டை அல்ல, அவர்கள் கட்சியை என்றும் சாடினார்.

மேலும், 'அரசைக் குறை சொல்லக் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவொரு உண்மையான காரணமும் கிடைக்கவில்லை' என்று குறிப்பிட்ட அவர் 'இந்தப் பேரணி காங்கிரஸ் கட்சியின் எண்ணத்திலுள்ள பலவீனத்தைக் குறிப்பது. இப்போதுள்ள மக்களுக்கு எல்லாம் தெரியும் என்பதால் அவர்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது' என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா தெரிவித்தார்.

இதையும் படிங்க: இலங்கை அதிபர் தேர்தல்: சஜித் பிரேமதாச முன்னிலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.