இது தொடர்பாக புதுச்சேரி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில், புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. எனவே, இதற்கு ஆளுநர் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
அதன்பின் சாமிநாதன் எம்எல்ஏ கூறுகையில், ‘புதுச்சேரி சட்டப்பேரவையை காங்கிரஸ் அலுவலகமாக முதலமைச்சர் நாராயணசாமி நினைத்துக் கொண்டுள்ளார். மக்கள் பிரச்னைகளை திசை திருப்பவே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முயல்கிறது. இதனை ஆளுநர் கிரண்பேடி அனுமதிக்கக் கூடாது’ என்றார்.
இதற்கிடையே, புதுச்சேரி சட்டப்பேரவையின் அதிகாரத்தின் அடிப்படையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதம் செய்வது நாடாளுமன்றத்துக்கு எதிரானது என, முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.