ETV Bharat / bharat

வேலைவாய்ப்பின்மை, குற்ற சம்பவங்கள் குறித்தும் பேசுங்கள் - நிதீஷ் குமாருக்கு அறிவுறுத்திய தேஜஸ்வி

பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்பின்மை குறித்தும், அதிகரித்துவரும் குற்றச் சம்பவங்கள் குறித்தும் பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

nitish-kumar-should-speak-on-crime-unemployment-in-bihar-tejashwi-yadav

author img

By

Published : Sep 8, 2020, 2:56 AM IST

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்து காணொலி மூலம் உரையாற்றினார். அதில், மாநிலத்தில் சிலர் தனது அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள், ஆனால் அரசாங்கம் கரோனா பரிசோதனை திறனை ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தியுள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாது எனக் கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “ பீகார் அரசாங்கம் மக்களை அச்சம் நிரைந்த சூழலிலே வைத்துக்கொள்ள விரும்புகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல் படி, மாநிலத்தில் நிகழும் குற்றங்களின் விகிதம் 40ஆக உள்ளது.

ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு பாலியல் வன்புணர்வு, ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துவருவது தெரிகிறது.

நிதீஷ் குமார் மாநிலத்தின் உண்மை நிலை குறித்து பேசவேண்டும். பீகார் இளைஞர்கள் நிறைந்த மாநிலம். அவர்களுக்கு மாநிலத்தின் உண்மை நிலை புரியவேண்டும்.

கடந்த 15 வருடங்களில் மாநிலத்தில் வேலைவாய்ப்புகளின் நிலை குறித்தும், கரோனா வைரஸ் மற்றும் வெள்ள பாதிப்புகளில் நிதீஷ் குமார் எங்கு சென்றார் என்பது குறித்தும் தெளிவான விளக்கம் தரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில், அரசாங்கம் தோல்வியுற்றதாகவும், மாநில இளைஞர்களுக்கு வேலை வழங்கத் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டி ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தொழிலாளர்கள் பாட்னாவில் உள்ள ஜனதா தளம் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.