இந்தியாவில் உள்ள ஆர்.ஆர்.பி. (Regional Rural Bank) வங்கி மேற்பார்வையாளர், வங்கிகளில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான நடத்தப்படும் பொதுத்தேர்வு இதுவரை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வர்கள் தேர்வு எழுதி வந்தனர். ஆங்கிலம், இந்தியில் மட்டும் தேர்வு நடைபெறுவதால் தேர்வெழுதும் தேர்வர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால், இனி வரும் காலங்களில் தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் உத்தரவிட்டார். இதில் ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, வங்காளி, குஜராத்தி, கன்னடம், தமிழ், கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தேர்வு எழுதலாம் என குறிப்பிட்டார்.
மேலும், நாளை பட்ஜெட் தாக்கல் உள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் பரம்பரை பணக்காரர்களுக்கு செக் வைக்கும் விதத்தில் பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.