மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் சந்தேகத்திற்டமான முறையில் பள்ளி சிறுவன் ஒருவன் உயிரிழந்து கிடந்துள்ளான். இதுகுறித்து காவல் துறையினர் விசாரிக்க தொடங்கினர். முதலில் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தொடங்கிய விசாரணையில் புதிய திருப்பமாக காதல் பிரச்னை தெரியவந்தது.
இது தொடர்பாக மோர்வாஹி கிராமத்தில் வசிக்கும் சேவக்ரம் மணிராம் குருபேலே என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 10ஆம் வகுப்பு படிக்கும் டாரோன் என்ற சிறுவன் தேர்வெழுதிவிட்டு தனது கிராமத்திற்கு திரும்பியுள்ளான். மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்ற டாரோனை, குருபேலே வலுக்கட்டாயமாக வயலுக்கு அருகாமையில் அழைத்து சென்று தான் வைத்திருந்த சுத்தியலால் டாரோனை பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தனது மகளை டாரோன் காதலிப்பானோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது.
மேலும், காவல்துறை விசாரணையில் அவர்கள் இருவரும் காதலிக்கவே இல்லை என்பது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிய சந்தேகத்தினால் பள்ளி சிறுவன் உயிர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருவல்லிக்கேணி அதிமுக இணை செயலாளருக்கு கொலை மிரட்டல் - இரண்டு பேர் கைது