மும்பையில், ஒரே வளாகத்துக்குள் பல்வேறு நிறுவனங்கள் செயல்படும் வகையில் கட்டங்கள் கட்டுவதற்காக அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் ரகுலீலா நிறுவனங்களுக்கு 4 வருட காலக்கெடுவுடன் டெண்டர் விடப்பட்டது.
ஆனால், இரு நிறுவனங்களும் கொடுத்த காலக்கெடுவுக்குள் கட்டடத்தை கட்டி முடிக்காமல் இருந்துள்ளன. இதனால் மும்பை நகர்ப்புற பிராந்திய மேம்பாட்டு ஆணையம்(எம்.எம்.ஆர்.டி.ஏ) இரு நிறுவனங்களுக்கும் 432 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இதனை எதிர்த்து இரு நிறுவனங்களும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ”சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கே மூன்று வருடங்களாகி விட்டன. இதனால், கட்டடம் கட்டுவதற்கான காலக்கெடுவை கூடுதலாக மூன்று வருடம் நீட்டிக்குமாறு கேட்டதற்கு அவர்கள் அவகாசம் வழங்காமல் அபராதம் விதித்துள்ளார்கள். இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்”, என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்.எம்.ஆர்.டி.ஏ தவறாக அபராதம் விதித்தாகக் கூறி அதனை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: