ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும், சிங்கப்பூர்-இந்தியா ஹாக்கதான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார்.
அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுகவின் மூத்தத் தம்பிதுரை உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, மோடிக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக மாணவர்களுடன், இந்திய மாணவர்கள் கலந்துரை நடத்துவதே சிங்கப்பூர்-இந்தியா ஹாக்கதான் நிகழ்ச்சியாகும். கடந்த முறை சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி இந்தாண்டு சென்னையில் நடக்கிறது.
மோடியின் ஐஐடி வருகையால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐஐடி வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் எதனை பற்றி உரையாற்றலாம் என்பது குறித்த தங்களின் கருத்துகளை ஐஐடி மாணவர்கள் ’நமோ ஆப்’ மூலம் தெரிவிக்கலாம் என மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.