பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சேடம் நகரைச் சேர்ந்த சந்த் பாஷா எனும் மருத்துவர் தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்.
கரோனா காலமாக இருந்தாலும், மருத்துவரின் இந்த மனிதாபிமானமிக்க செயல் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பேசிய மருத்துவர், "கரோனாவுக்கு எதிரான போர் முடியும் வரை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்" என்றார்.
இங்கு வரும் நோயாளிகளுக்கு கைகளை சுத்தம் செய்வதற்கான சானிடைசரும், முகக்கவசமும் வழங்கப்படுகிறது.
பல தனியார் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் கரோனா பரவல் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவே தயங்கும் நிலையில், சந்த் பாஷாவின் இச்செயல் பிறருக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: காட்டேரி பட ரிலீஸ் ஒத்திவைப்பு - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது அதிருப்தி