கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் விவியன் லால்ரெம்சங்கா என்பவர் மரணம் அடைந்தார்.
அவரின் உடலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான ஜெயந்த்ஜிரான், சின்னதம்பி ஆகியோரின் உதவியுடன் மூன்றாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தார் லால்ரெம்சங்காவின் 23 வயதான நண்பர் ரபேல் ஏ.வி.எல். மல்ச்சன்ஹிமா.
தற்போது ரபேல் தனிமைப்படுத்தல் முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஐந்தாயிரம் ரூபாய் நன்கொடையும் வழங்கினார்.
-
Faith in humanity just got restored again!
— Zoramthanga (@ZoramthangaCM) April 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
After his selfless and heroic act of accompanying the mortal remain of his friend for more than 3000 kms, Raphael AVL Malchhanhima donated Rs. 5000/- to the CM Relief Fund from a Govt. designated Quarantine Centre!#Hero#Tlawmngaihna pic.twitter.com/RcrYy4AmjX
">Faith in humanity just got restored again!
— Zoramthanga (@ZoramthangaCM) April 30, 2020
After his selfless and heroic act of accompanying the mortal remain of his friend for more than 3000 kms, Raphael AVL Malchhanhima donated Rs. 5000/- to the CM Relief Fund from a Govt. designated Quarantine Centre!#Hero#Tlawmngaihna pic.twitter.com/RcrYy4AmjXFaith in humanity just got restored again!
— Zoramthanga (@ZoramthangaCM) April 30, 2020
After his selfless and heroic act of accompanying the mortal remain of his friend for more than 3000 kms, Raphael AVL Malchhanhima donated Rs. 5000/- to the CM Relief Fund from a Govt. designated Quarantine Centre!#Hero#Tlawmngaihna pic.twitter.com/RcrYy4AmjX
இந்நிலையில் ரபேலை வெகுவாகப் பாராட்டியுள்ள மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா, ”இளைஞர்கள் உண்மையான கதாநாயகர்கள். இவர்களின் வீரதீரச் செயல் என்றென்றும் நிலைத்து நிற்கும்“ எனக் கூறியுள்ளார்.
மேலும், “மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மூவாயிரம் கி.மீ.க்கு மேல் பயணம்செய்த அவர்களின் தன்னலமற்ற வீரதீரச் செயலைப் பாராட்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மது குடித்தால் கரோனா அழியும் - காங்கிரஸ் எம்எல்ஏ 'கண்டுபிடிப்பு'!