ETV Bharat / bharat

ஏன் அவர்களைக் காணவில்லை... எங்கே போனார்கள்? - பிரியங்கா ரெட்டி பாலியியல் வன்கொடுமை மரணம்

ஹைதராபாத்: கால்நடை மருத்துவருக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை மரணத்தால் நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், ஹைதராபாத் நகரில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஒரு அலசல்.

Hyderabad rape horror
Hyderabad rape horror
author img

By

Published : Dec 5, 2019, 8:22 PM IST

16 வயது சிறுமிக்கு நேர்ந்த அநீதி!

ஒரு குடும்பம் வாழ்வாதாரத்தைத் தேடி நகரத்திற்கு குடிபெயர்ந்தது. தேநீர் கடையை நடத்தும் தாய்க்கு ஓய்வு நேரத்தில் அவரது 16 வயது மகள் உதவி வந்தார். ஒருநாள் இரவு அந்தச் சிறுமி திடீரென காணாமல் போனாள். அவரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போகவே, குடும்பத்தினர் இரவு 11 மணிக்கு கச்சிபவுலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தனது மகளை கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் வீட்டிற்கு சென்ற அந்தத் தாய்க்கு, அடுத்தநாள் ஒரு அதிர்ச்சி செய்தி கேட்கப் போகிறோம் என்பது தெரியாது.

ஒதுக்குப்புறப் பகுதியில் ஒரு சடலத்தை கண்டுபிடித்ததாக, அவருக்கு காவல் துறையினர் தெரிவித்தனர். அதன்படி அவ்விடம் சென்று அத்தாய் பார்த்தபோது உடலில் பலத்த காயங்களுடன் தனது மகள் உயிரற்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் மயங்கி சரிந்தார்.

சடலமாகக் கிடைத்த மருத்துவர் திஷா

சில நாள்களுக்கு முன்பு சம்ஸாபாத்தில், இளம் மருத்துவர் திஷா பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்தத் துயரமான நாளில் இரவு 9 மணிக்கு, தான் இருந்த சூழலை விளக்க, தனது சகோதரியை அவர் அழைத்தார். விஷமிகள் சிலர் துரத்திக் கொண்டிருந்ததால் அவர் பீதியடைந்தார். அடுத்த சில நிமிடங்களில், அவரது செல்போன் ஸ்விட்ச்-ஆப் ஆனது. இதனால் கவலையடைந்த பெற்றோர், இதுபற்றி புகார் அளிக்க இரண்டு காவல் நிலையங்களுக்குச் செல்ல நேரிட்டது.

ஆனால், காவல் துறையினரின் அலட்சியத்தால், எரிந்த நிலையில் திஷா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். நெருக்கடியான ஒரு சூழலில் காவல் துறையினரின் மெத்தனமான அணுகுமுறை, அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மாயமும்... மர்மமும்...!

நகர எல்லைக்குள் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள், அறிவிப்பு பலகையில் நிறைந்துள்ளன. சில காவல் நிலையங்களில், காணாமல்போன குடும்ப உறுப்பினர்களைக் கண்டுபிடித்து தந்தால் வெகுமதி என்ற அறிவிப்புகளும் உள்ளன.

ஹைதராபாத் போன்ற ஒரு பெரிய நகரத்தில், ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் குடும்ப பிரச்னைகளுக்காக, இன்னும் சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக காணாமல் போகிறார்கள்.

ஹைதராபாத்தில் நவம்பரில் மட்டும் காணாமல்போன 40 பேரில், 11 சிறார்கள், 14 பெண்கள் அடங்குவர். காணாமல் போனவர்களைத் தேடிவருகிறோம் என்று காவல் துறையினர் சொன்னாலும், அதற்கான எந்தவொரு தடயமும் இல்லை.

நிம்மதியின்றி தவிக்கும் பெற்றோர்

ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஒரு பெண் அளித்த புகாரில், பிரிந்து வாழும் கணவர் தமது இரு குழந்தைகளை சென்னைக்கு அழைத்து சென்றுவிட்டதாகக் கூறியிருந்தார். அவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு பெண் தனது மண உறவைத் தாண்டிய காதலனுடன் ஓடிவிட்டார். மகள் காணாமல் போனது குறித்து அவரது தந்தை புகார் அளித்தார். பல மாதங்கள் உருண்டோடிவிட்ட நிலையிலும் இந்த இரு வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்தாண்டு ஜூன் 1 முதல் 10ஆம் தேதி வரை சுமார் 540 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 303 பேர் ஹைதராபாத், சைபராபாத், ராச்சகொண்டா சட்ட வரம்புக்கு உள்பட்டவர்கள். 276 பெண்கள், 55 சிறுமியர், 26 சிறுவர்கள், 183 ஆண்கள் காணாமல்போனதில், 222 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த மூன்று காவல் ஆணையரக அதிகார வரம்பில் நவம்பர் மாதத்தில் மட்டும் 38 - 40 காணாமல்போன வழக்குகள் பதிவாகி உள்ளன.

மாநிலத்தில் தினமும் சராசரி 60 பேர் காணாமல் போகின்றனர்; அவர்களில் பெரும்பாலானோர் ஹைதராபாத் பெருநகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லாம் எங்கே செல்கிறார்கள்? தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் கைகளில் சிக்கி மரணத்தை தழுவுகின்றனரா? என்ற கவலை உண்டாகிறது. தங்களின் வளரிளம் பருவ மகள்கள் பாதுகாப்பாகவும், உயிருடனும் வீட்டிற்கு வரும்வரை பெற்றோருக்கு நிம்மதி என்பதே இல்லை; வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

காணாமல்போன சிறுமியர், பெண்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை கண்டுபிடிப்பது காவல் துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. தப்பி ஓடுதல், திருமணம் தொடர்பான காணாமல்போன வழக்குகளை காவல் துறையினர் கடத்தல் வழக்குகளாகவே பதிவு செய்கின்றனர்.

விடையின்றி தொடரும் வினா?

கே.பி.எச்.பி. ஆறாவது பிரிவில் வசிக்கும் ரமணா, ஜூன் 24இல் காணாமல்போன தமது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரனை தேடிவருகிறார். அதேப் பகுதியில் காவலாளியாக பணிபுரியும் துக்கி பாலசாமி, தமது 17 வயது வாய் பேசமுடியாத மகன் ராகேஷ், செப்டம்பர் 23இல் காணாமல் போனதாகத் தெரிவித்தார். அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவர் பலமுறை புகார் அளித்தும் மகனைப் பற்றிய எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

கே.பி.எச்.பி. நான்காவது பிரிவில் வசிக்கும் வி.எஸ். ராஜு, தனது 78 வயது மனநலம் பாதித்த தந்தை ஜூன் 21 அன்று காணாமல்போனதாகவும் அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும் கூறினார். இந்திரா நகரில் வசிக்கும் தினக்கூலியான 40 வயது கீதா, 2017 மே மாதம் வீட்டை விட்டு வெளியேறினார்; இதுவரை திரும்பி வரவில்லை. அவரது தாய் ஜெயம்மா, இது குறித்து பாலா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்; எனினும் அவரது மகளை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ராஜு காலனியில் வசிக்கும் 36 வயதான சஞ்சீவ ராவ், 3 மாதங்களுக்கு முன்பு காணாமல்போனார். இதுபற்றி அவரது மனைவி கருணாஸ்ரீ, காவல் துறையில் தெரிவித்தும் எந்தப் பலனுமில்லை.

இதுபோன்ற காணாமல்போனவர்கள் குறித்த வழக்குகளைத் தீர்ப்பதில் லாலாகுடா காவல் துறை ஒரு முன்மாதிரியாக உள்ளது. யாரிடமும் சொல்லாமல் மாயமானவர்களைக் கண்டுபிடிப்பதில், அவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்கள் லாலாபேட்டை, சாந்தி நகர், சந்திரபாபு நகர், சத்யா நகர், இந்திரா நகர், லாலாகுடா, மெட்டுகுடா ஆகிய அதிகார வரம்புகளை மூன்று மண்டலங்களாகப் பிரித்து, எதிர்பாராத எந்தவொரு நிகழ்வுகளையும் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

இங்கு, 2016 -19 ஆண்டுகள்வரை காணாமல்போனவர்கள் குறித்த 69 வழக்குகளில் ஒன்று மட்டுமே தீர்க்கப்படாமல் உள்ளது. காணாமல்போன 68 பெண்களை, காவல் துறையினர் கண்டுபிடித்து பாதுகாப்பாக அவரவர் குடும்பங்களுக்கு அனுப்பியுள்ளனர்.

விபரீத முடிவுகள் வினையாகும்

கே.பி.எச்.பி. காலனியில், பெண்கள் விருப்பப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சில பெண்கள் வீட்டை விட்டு வெளியேறும் தங்களது முடிவை கைப்பட எழுதி கடிதம் மூலம் தெரிவித்துச் செல்கின்றனர். இளம் மருத்துவரின் கொடூரமான கொலைக்கு பிறகு, காணாமல்போன பெண்களின் பெற்றோர் தங்களது மகள்களின் இருப்பிடத்தை அறிய அதிக முனைப்பு காட்டுகின்றனர்.

கே.பி.எச்.பி. காவல் நிலையத்தில் 2017இல் காணாமல்போன 191 பேரில் 180 பேர் பத்திரமாகத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். காணாமல்போனவர்கள் பற்றிய அனைத்து வழக்குகளையும் தீர்ப்போம் என்று கே.பி.எச்.பி. காவல் நிலைய சி.ஐ. லட்சுமி நாராயணா உறுதியளித்தார்.

காணாமல் போன பெரும்பாலான வழக்குகளில் சிறுமியர் சட்டப்படி 18 வயதை அடைந்ததும் ஓடிப்போவது ஆகும். அவர்களில் சிலர் திருமணமான பிறகு தங்கள் வீட்டுக்குத் திரும்புகின்றனர்; மற்றவர்களோ ஆண் நண்பர் தங்களை ஏமாற்றிவிட்டதாக அழுது புலம்பி காவல் துறையை அணுகுகின்றனர். திருமணம் செய்வதற்காக ஓடிப்போனவர்களுக்கு காவல் துறை சார்பில் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுவருகிறது.

அவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், இளம் தம்பதிக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்கின்றனர். சிறுமியர் தப்பியோடிய வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவலில் அடைக்கப்படுகிறார்.

ஹயாத்நகர் காவல் நிலைய பகுதியில் காணாமல்போன வழக்குகளில், பெரும்பான்மையானவர்கள் முதியோர் இல்லங்கள் மற்றும் அனாதை இல்லங்களைச் சேர்ந்தவர்கள். மூத்த குடிமக்களின் காது கேளாமை, நினைவாற்றல் குறைபாடு காரணமாக அவர்களை கண்டுபிடிப்பது கடினமாகிவருகிறது. ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்டு, காப்பகங்களில் ஹயாத்நகர் காவல் துறை சேர்த்துவருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் சில நாட்களுக்கு முன்பு வீடுகளிலிருந்து தப்பிவந்தவர்கள்.

புள்ளிவிவரங்கள்:

பாலா நகர்

காணாமல்போன 134 பேரில், 20 விழுக்காடு இளம் பெண்கள். அவர்களில் 95 விழுக்காட்டினர் தங்கள் வீடுகளுக்கு பத்திரமாக திரும்பிவிட்டனர். பாலா நகர் காவல் நிலையத்தில் காணாமல்போனவர்கள் குறித்த 303 வழக்குகள் 2014 முதல் பதிவாகி உள்ளன; இதில் 286 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. எஞ்சிய 17 வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த காவல் நிலையத்தில் பதிவான வழக்குகளில் 40 முதல் 70 விழுக்காடு வழக்குகள், காணாமல்போனவர்கள் பற்றியது. காணாமல்போனதன் பின்னணி காரணங்களை ஆராய்ந்து அதற்கேற்ப வழக்கை தீர்த்துவைப்பதாக, பாலாநகர் காவல் நிலைய சி.ஐ. வஹியுதீன் கூறினார்.

ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் காணாமல்போனவர்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை, கடந்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக குறைந்துள்ளது. 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வழக்குகள் நல்லமுறையில் தீர்க்கப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் காணாமல்போனவர்கள் குறித்த 546 வழக்குகள் பதிவான நிலையில், அதில் 20 வழக்குகள் மட்டுமே தீர்க்கப்படவில்லை. ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலைய சி.பி.ஐ. பலவந்தையா, காணாமல்போனவர்கள் குறித்த விவரம் சேகரித்து, தொழில்நுட்ப உதவியுடன் வழக்குகளைத் தீர்ப்பதாகக் கூறினார்.

பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் காணாமல்போனவர்கள் குறித்த வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 735 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2018ஆம் ஆண்டில் காணாமல்போன 96 பேரில் 51 பெண்கள், 12 சிறுமியர் உள்ளனர். 2019ஆம் ஆண்டில் 54 ஆண்கள், 39 பெண்கள், நான்கு சிறுவர்கள், ஒரு சிறுமி காணாமல்போயுள்ளனர். காணாமல்போனவர்கள் குறித்த 98 வழக்குகளில், 81 பேரை காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியும்.

குத்புல்லாபூர் மண்டலம் தண்டிகல் காவல் நிலையத்தில் காணாமல்போனவர்கள் குறித்த 576 வழக்குகள், கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவாகின. இவற்றில், 78 வழக்குகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. 2018 முதல், இங்குள்ள காவல் துறையினர் சிறுமியர் கடத்தல் தொடர்பான பெற்றோரின் புகார்களை பதிவு செய்துவருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், 19 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் 3 இல் பெண்கள் காணாமல்போனது தொடர்பானது. புகார் பெறப்பட்ட ஓராண்டுக்கு பிறகு, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் மூடப்படுவதாக தண்டிகல் காவல் நிலைய எஸ்.ஐ. சேகர் ரெட்டி தெரிவித்தார். இப்போது நிலைமை மாறிவிட்டது; காணாமல்போன வளரிளம் பெண்கள் குறித்து பெற்றோரிடமிருந்து புகார் வந்ததும், உடனடியாக கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படுவதாக அவர் கூறினார்.

2016 பிப்ரவரி 13இல், பணியின்போது மேடரம் பகுதிக்குச் சென்ற 45 வயது வீட்டுக் காவலர் முகமது இப்ராஹிம் காணாமல்போனார். கடந்த 3 ஆண்டுகளாக அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவரது மனைவி சலீமா பேகம், கணவரைக் காணவில்லை என்று சந்திரயனா குட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பிப்ரவரி 20, 2016 அன்று இருப்பிடம் பற்றி கணவர் தமக்கு தெரிவித்ததாக, புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடைசி செல்போன் அழைப்புக்கு பிறகு அவரைக் காணவில்லை. அவரை கண்டுபிடிக்க, சந்திராயனா குட்டா காவல் துறையினர், வாரங்கல் காவல் துறையினருடன் கரம் கோர்த்தனர்; ஆனால் அதெல்லாம் வீணானது.

இதையும் படிங்க: மலையாளத்தில் புதைந்துள்ள ‘தமிழ்’ வார்த்தைகள்... - இயக்குநர் ராம் சொல்வது என்ன?

Intro:Body:

Missing cases, Hyderabad rape horror 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.