ஸ்ரீநகர்: மத்திய காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தின் சடூரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பயங்கரவாத குழுவில் புதிதாக சேர்ந்த ஒருவர் ஏ.கே 47 ரக துப்பாக்கியுடன் பிடிபட்டார்.
இது தொடர்பாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கேர்ல் ராஜேஷ் கலியா கூறியதாவது, "காஷ்மீரின் சடூராவில் அமைந்துள்ள வாகன சோதனைச் சாவடியில் இன்று (அக்டோபர் 16) காலை பயங்கரவாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதையடுத்து, அந்த பகுதியைச் சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏ.கே 47 ரக துப்பாக்கியுடன் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர், மூன்று நாட்களுக்கு முன்பு பயங்கரவாத குழுவில் சேர்ந்த ஜெஹாங்கிர் அஹ்மத் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.