ETV Bharat / bharat

தாயைக் கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் - வாரணாசி கொலை

லக்னோ: மனநலம் பாதிக்கப்பட்ட மகன், தனது தாயை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mentally
Mentally
author img

By

Published : Jun 27, 2020, 9:26 PM IST

உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் ரித்தேஷ் (16). இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் வாரணாசியில் உள்ள இவரது பாட்டியின் வீட்டில் தங்கி, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரை பார்த்துக்கொள்வதற்காக ரித்தேஷின் அம்மா நிர்மலாவும் அங்கேயே இருந்துள்ளார்.

இந்நிலையில், சோன்பந்த்ரா பகுதியில் இருக்கும் தந்தையை பார்க்க நிர்மலாவுடன் ரித்தேஷ் வந்துள்ளார். ஆனால், அவரின் தந்தை வேறு சில பணிகள் காரணமாக வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் நிர்மலாவும், ரித்தேஷும் அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் கிளம்பலாம் என்று தீர்மானித்துள்ளார்.

அந்த நேரத்தில் வீட்டைப் பூட்டிவிட்டு தாய் நிர்மலாவை ரித்தேஷ் கொலை செய்துள்ளார். நிர்மலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கதவுகளைத் திறக்க முயற்சித்துள்ளனர்.

பின்னர் தந்தை வந்து நடந்த சம்பவத்தை அறிந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நிர்மலா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நிர்மலாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனே தாயைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வி.ஹெச்.பி. பிரமுகர் பட்டப்பகலில் படுகொலை! ஆன்லைனில் உலாவும் வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.