லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த கோயில் பூசாரி நேற்று (அக்.11) அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். நிலத் தகராறு தொடர்பாக கோயில் பூசாரி சுடப்பட்டுள்ளார் என்பது தெரியவருகிறது.
இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசை கண்டித்து, அவர் இந்தியில் பதிவிட்ட ட்வீட் பதிவில், “ராஜஸ்தானை போன்று உத்தரப் பிரதேசத்திலும் நில மாபியாக்களின் அராஜகம் தொடர்கிறது.
சாமியாரால் ஆட்சி நடத்தப்படும் உத்தரப் பிரதேசத்தில் சாமியார்களுக்கு பாதுகாப்பில்லை. இது அவமானம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
-
2. यूपी की सरकार इस मामले में सभी पहलुओं का गम्भीरता से संज्ञान लेकर दोषियों के विरूद्ध सख्त कानूनी कार्रवाई करे तथा इस घटना से जुडे़ सभी भू-माफियाओं की सम्पत्ति भी जरूर जब्त की जाये। साथ ही, साधु-सन्तों की सुरक्षा भी बढ़ाई जाये। 2/2
— Mayawati (@Mayawati) October 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">2. यूपी की सरकार इस मामले में सभी पहलुओं का गम्भीरता से संज्ञान लेकर दोषियों के विरूद्ध सख्त कानूनी कार्रवाई करे तथा इस घटना से जुडे़ सभी भू-माफियाओं की सम्पत्ति भी जरूर जब्त की जाये। साथ ही, साधु-सन्तों की सुरक्षा भी बढ़ाई जाये। 2/2
— Mayawati (@Mayawati) October 12, 20202. यूपी की सरकार इस मामले में सभी पहलुओं का गम्भीरता से संज्ञान लेकर दोषियों के विरूद्ध सख्त कानूनी कार्रवाई करे तथा इस घटना से जुडे़ सभी भू-माफियाओं की सम्पत्ति भी जरूर जब्त की जाये। साथ ही, साधु-सन्तों की सुरक्षा भी बढ़ाई जाये। 2/2
— Mayawati (@Mayawati) October 12, 2020
கோண்டா டிர்ரி மனோரம்மா கிராமத்தில் ராமர்-சீதாதேவி (ராம்-ஜானகி) கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை சிலர் சட்டவிரோதமாக அபகரிக்க நினைக்கின்றனர். இந்தத் தகராறில் கோயில் குருக்கள் அதுல் பாபா என்ற சாம்ராத் தாஸ் சுடப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் அவரின் இடது தோல்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தாஸ் தற்போது லக்னோவில் உள்ள மன்னர் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் உடல்நிலை நிலையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஆட்சி நடத்தும் அருகதையை யோகி அரசு இழந்துவிட்டது!'- சந்திரசேகர ஆசாத்!