பாஜக மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான மனோஜ் திவாரி, ஈடிவி பாரத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “நாட்டில் முழு அடைப்பு (லாக்டவுன்) அமலில் இருக்கும் நிலையில், டெல்லி அரசாங்கம் மக்களுக்கு உணவு, மருத்துவம் மற்றும் உறைவிடம் என எந்த வசதியையும் செய்துகொடுக்கவில்லை.
டெல்லி மக்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்கவில்லை. இந்தப் பெருந்தொற்று நெருக்கடியால் மக்கள் உணவின்றி தவிக்கின்றனர். அவர்களை, அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பட்டினிப்போட்டு கொல்கிறது.
டெல்லியில் வெளிமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே தவித்துவருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, சிறப்பு ரயில்கள் மூலம், சொந்த மாநிலத்துக்கு அவர்கள் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.
மேலும், “டெல்லியில் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பா.ஜனதா தொண்டர்கள் உணவு வழங்கி வருகின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா பாதிப்பு, மாநிலங்கள் வாரியாக தகவல்!