கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மணியன் என்ற காட்டு யானை மக்களோடு நண்பனாக பழகிவந்தது. பத்தேரி கிராமத்தில் மணியனை அதிகமாக பார்க்க முடியும் , இங்குள்ள கிராம மக்கள் மணியன் யானையோடு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது, சாப்பிட பழங்களைக் கொடுப்பது என தோழமையோடு பழகி வந்தனர்.
இதுவரை, மணியன் யானை மக்களை தாக்கியதில்லை. எந்த இடையூறும் செய்ததில்லை. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வனப்பகுதியில், யானைக் கூட்டத்துடன் ஏற்பட்ட சண்டையில் மற்றொரு காட்டு யானை மணியனை கடுமையாக தாக்கியுள்ளது. இதில், நெற்றி, வயிறு என பல இடங்களில் படுகாயங்கள் ஏற்பட்ட மணியன் யானை உயிரிழந்தது.
புல்லுமலா வனத்தில் மணியன் யானை இறந்துள்ளது குறித்து மக்களுக்கு தெரியவர, அப்பகுதிக்கு மக்கள் குவிந்தனர். பலரும் அந்த யானையை வணங்கிச் செல்கின்றனர். யானையின் இறப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை எற்ப்படுத்தியுள்ளது.