மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பெய்து வருகிறது. ரத்னகிரியில் உள்ள திவாரே அணை உடைந்து 22 பேர் காணாமல் போனதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜ்பூர் அணை நிரம்பி வழிவதால், அங்கிருந்து கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவின் பெலகாவி, பாகல்கோட் மாவட்டகளில் கிருஷ்ணா நதி நீரின் வருகை அதிகரித்துள்ளது. இதேபோல் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை தொடர்ந்தால் இந்த இரண்டு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும் என அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா நதி நீரின் வருகை அதிகரித்துள்ளதால் பெலகாவி, பாகல்கோட் ஆகிய மாவட்டங்களின் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.