லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் பயணச்சீட்டு கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லக்னோவிலிருந்து டெல்லிவரை ஏசி வகுப்பில் செல்வதற்கான பயணச்சீட்டு கட்டணம் ரூபாய் 1,125 எனவும் சொகுசு வசுதிகளுடன் கூடிய வகுப்பில் செல்வதற்கான கட்டணம் ரூபாய் இரண்டாயிரத்து 310 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கட்டணம் அதிகமாக இருந்தாலும் அதில் பல சிறப்பு வசதிகள் உள்ளன. லக்னோவிலிருந்து டெல்லி வரையிலான பயண தூரத்தை இந்த ரயில் 6 மணி நேரத்தில் அடைந்துவிடும். விமானத்தில் பணிப்பெண்கள் இருப்பது போல் இதிலும் பணிப்பெண்கள் அமர்த்தப்படப்போகிறார்கள்.
மேலும், இந்திய ரயில்வேயின் இணைப்பு நிறுவனமான ஐஆர்சிடிசியின் (IRCTC) முழுக்கட்டுப்பாட்டில் இயங்கப்போகும் முதல் ரயில் இதுவே. இந்த ரயில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
இதன் முதல் ஓட்டத்தை உத்தரப் பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவிலிருந்து அக்டோபர் 4ஆம் கொடியசைத்து தொடங்கிவைக்க-இருக்கிறார்.
இதையும் படிங்க: #IRCTC பொங்கல் பண்டிகைக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடக்கம்