ETV Bharat / bharat

திவால் சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! - Insolvency Code

டெல்லி: திவால் சட்ட திருத்த மசோதா குறித்து விவாதிக்க நேரமளிக்கவில்லை என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் குற்றம் சுமத்தியதால், நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றம்
author img

By

Published : Aug 1, 2019, 6:41 PM IST

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திவால் சட்டத்தில் 7 திருத்தங்கள் செய்வதற்கான மசோதாவை அறிமுகம் செய்தார்.

இந்த மசோதா சட்டமானால், அது வாராக்கடன்களை விரைவாக தீர்க்கவும், 14 நாட்களுக்குள் திவால் விண்ணப்பம் ஏற்கப்படாதபோது, உரிய அலுவலர்கள் அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாகத் தரவும், திவால் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் 330 நாட்களுக்குள் செய்து முடிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.

திவால் சட்ட திருத்த மசோதா குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்க நேரமளிக்கவில்லை என காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆதிர் ரான்சன், திரிணாமுல் கட்சி உறுப்பினர் செளகதா ராய், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் கனிமொழி ஆகியோர் குற்றம்சாட்டினர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், ‘திவால் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்பு பல்வேறு சட்ட விதிகளில் தெளிவினைக் கொடுக்கும்’ எனப் பதிலளித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.