கர்நாடகாவில் ஆகஸ்ட் 1ஆம் முதல் தேதி கனமழை பெய்தது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்தனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்தது. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருந்தன.
இந்தநிலையில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய நிவாரண நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடன் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் கே.வி.பிரதாப் தலைமையில் 6 பேர் கொண்டு குழுவினர் இன்று (செப்.8) கர்நாடகாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
அப்போது முதலமைச்சர் எடியூரப்பா, முக்கிய அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து, கர்நாடகாவில் ரூ. 8 ஆயிரத்து 71 கோடி வரை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ளது என மத்திய ஆய்வுக் குழுவினரிடம் எடியூரப்பா தெரிவித்ததாக அறிக்கை வெளியாகியுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ''கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் 22 மாவட்டங்கள் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டது. இம்முறை வெள்ளத்தால் 4.03 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சாலைகள், பாலங்கள், மின்கம்பங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள், அரசு அலுவலகங்கள் என ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தால் முழுவதுமாக வீடுகளை இழந்த மக்களுக்கு ரூ. 5 லட்சமும், சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.3 லட்சமும், சிறிய அளவில் சேதம் ஏற்பட்ட வீடுகளுக்கு ரூ.50 ஆயிரமும் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது.
கரோனா சூழல் மற்றும் வெள்ள பாதிப்புகளை சரிசெய்வதற்காக மாநில பேரிடம் நிவாரண நிதியிலிருந்து இதுவரை ரூ.460 கோடி வரை விடுவித்துள்ளோம். இந்தச் சூழலை சரிசெய்வதற்கு இன்னும் கூடுதலாக நிதி தேவை.
எஸ்டிஆர்எஃப் மற்றும் எண்டிஆர்எஃப் ஆகியவற்றின் கீழ் நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் திருத்தப்பட வேண்டும். அதனைத் திருத்தி உடனடியாக துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு உதவியளிக்க நிதிகளை விடுவிக்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருவனந்தபுரம் விமான நிலையம் : 'மத்திய அரசுக்கு கேரளா ஒத்துழைப்பு வழங்காது' - முதலமைச்சர் தடாலடி!