வெட்டுக்கிளிகள் கூட்டம் அதிகம் பாதித்த இடங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேளாண்மை, உழவர் நல அமைச்சகம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற 15 இடங்களில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு அலுவலகங்கள் (LCO) அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வேளாண்மை, உழவர் நல அமைச்சகம் கூறியதாவது;
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், டவுசா, பிகானேர், ஜோத்பூர், பார்மர், சித்தோர்கர், ஸ்ரீ கங்காநகர் போன்ற பல மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய பிரதேசத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுத்த சத்னா, பாலகாட், நிவாரி , ரைசன், சிவபுரி போன்ற மாவட்டங்களில் பயிர்கள் இழப்பு ஏதும் ஏற்படவில்லை. அதேநேரம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
வெட்டுக்கிளிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதிலிருந்து 53, 997 ஹெக்டேர் பரப்பளவில் மொத்தம் 377 இடங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சகம் தெரிவித்தது.
இதையும் படிங்க: எல்லையில் புதிதாக வெட்டுக்கிளி கூட்டம் வரவில்லை - மத்திய அமைச்சர்