உத்தரப் பிரதேசம் மாநிலம் குவால்டோலி பகுதியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் பணிபுரியும் கான்பூர் நீதிமன்ற வளாகத்தை இரண்டு நாள்களுக்கு மூடுவதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து கான்பூர் பார் அசோசியேஷனின் பொதுச் செயலாளர் கபில் டீப் சச்சான் கூறுகையில், "இந்த இரண்டு நாள்களில் நீதிமன்ற வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதால், அனைத்து நீதித்துறை பணிகளும் ரத்து செய்யப்படுகின்றன. வைரஸ் பரவாமல் இருக்க பதிவாளர் அலுவலகங்களை இரண்டு நாள்கள் மூட வேண்டும்" என்றார்.